குற்றாலம் ரஹ்மத் பார்டர் பரோட்டா கடை (Courtallam Rahmath Border Barotta Kadai)
JUL 31, 2021

குற்றாலம் அருவிக்கு செல்லும் அனைவரும் பார்டர் பரோட்டா கடையில் சாப்பிடாமல் வர விரும்ப மாட்டார்கள். மிகவும் பிரசித்திபெற்ற கடையின் பெயர் குற்றாலம் பார்டர் பரோட்டா கடை ஆனால் இக்கடை அமைந்திருப்பது என்னவோ செங்கோட்டையில். செங்கோட்டை தமிழ் நாட்டின் பார்டரில் கேரளாவிற்கு அருகில் அமைந்திருப்பதால் இக்கடைக்கு பார்டர் பரோட்டா கடை என்று பெயர். கடையின் உண்மையான பெயர் ரஹ்மத் பார்டர் பரோட்டா கடை. அனைத்து வாடிக்கையாளர்களும் விரும்பக் கூடிய வகையில் இந்த கடையில் அப்படி என்ன சிறப்பு? மற்ற இடங்களில் கிடைக்கும் பரோட்டாக்களில் இருந்து இந்த பரோட்டா தோற்றத்தில் வித்தியாசம் இல்லயெனிலும் சுவையிலும் தரத்திலும் சிறப்பானது. இங்கு நாட்டுக் கோழி குழம்புடன் பரோட்டா பரிமாறப்படும். அந்த நாட்டுக் கோழி சால்னாவின் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். ஒரு பரோட்டாவின் அளவு சாப்பாட்டு பிரியர்களுக்கு ஒரே வாயில் ஒரு பரோட்டாவை சாப்பிடும் அளவிற்கு இருக்கும். சிறியதாக இருந்தாலும் நல்ல பதத்திலும் சுவையிலும் இருக்கும்.

வேறென்ன இங்கு கிடைக்கும்? பிரியாணி... ஆம் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி கிடைக்கும். சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் பிரியாணி. மிகவும் காரம் இல்லாமலும் நல்ல வாசத்துடன் அதிகம் நெய் சேர்க்கப்பட்டு சிறந்த சுவையில் இரண்டு பிரியாணியும் கிடைக்கும். நாட்டுக்கு கோழி பெப்பர் ஃபிரை... மிகவும் சுவையான நாட்டுக்கு கோழி பெப்பர் ஃபிரை சாப்பிட கண்டிப்பாக இங்கு வரலாம். மேலும் நாட்டுக்கு கோழி 65, நாட்டு கோழி பிச்சி போட்ட பெப்பர் கறி போன்ற நாக்கூறும் சுவையில் நாட்டுக்கு கோழி உணவு வகைகள் கிடைக்கும். மேலும் என்னென்ன கிடைக்கும் என்று கீழே பார்க்கலாம்...

- Barotta | Veechi Barotta
- Egg Kothtu Barotta | Egg Veechi Barotta
- Omlette | Half Boil | Salna Omlette
- Egg Kalakki | Egg Masala Kalakki
- Naattu Kozhi Pepper Chicken | Kuzhambu Chicken
- Chicken 65 | Kaadai Full | Kaadai Biriyani
- Mutton Biriyani | Naattu Kozhi Biriyani
குற்றாலம் செல்லும் போது மறவாமல் ரஹ்மத் பார்டர் பரோட்டா கடைக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள். அது ஒரு புது அனுபவமாக இருக்கும்.