Rasavid Multicusine Restaurant Mutton Mandi & Chicken Kapsa
FEB 27, 2021

பொதுவாக பிரியாணி பிரியர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக மந்தி வகை பிரியாணியை ருசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு நம்ம சென்னையில் ஒரு சிறந்த இடம் இருக்கு, அது தான் இந்திரா காந்தி நகர் வேளச்சேரியில் இருக்கின்ற Rasavid Multicusine Restaurant. இந்த உணவகத்தின் முக்கியமான உணவு மட்டன் மந்தி (Biggest Mutton Mandi) மற்றும் சிக்கன் கப்ஸா (Chicken Kapsa) ஆகியவையாகும். ஆமாங்க மட்டன் மந்தி (Biggest Mutton Mandi) பெயருக்கு ஏற்றாற்போல் அதிகபட்ச அளவில் Small, Regular, Large என வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப வாங்கிக்கொள்ள வசதி ஏற்படுத்தி தருகிறார்கள். Rasavid உணவகம் கடந்த 6 வருடங்களாக ஹைதராபாத் பிரியாணி தான் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் உணவாக பரிமாறிட்டு இருந்தார்கள். பிறகு மந்தி பிரியாணி ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்று தற்போது வேளச்சேரியில் சிறந்த மந்தி பிரியாணி அப்படினு சொன்னால் நம்ம Rasavid Multicusine Restaurant தான்னு சொல்ல வைத்துவிட்டார்கள்.

மந்தி மட்டும் இல்லாமல் ஷிர்மல் நாண் மற்றும் பாயா நிஹாரி என்று இன்னொரு ஸ்பெஷல் காம்போ வைத்திருக்கிறார்கள். மேலும் ஷாஜஹானி கபாப், முர்க் கோர்மா, பன்னீர் அவுர் அனனாஸ் கா கோர்மா, பாலாக் தமதார்- கே- சுப்ஜி, காரமான ஆச்சார் முர்க், அக்பரி மட்டன் மசாலா, மிர்ச்சி கா சலான், மட்டன் பாயா மற்றும் தந்தூரி சாயா (Tandoori Chai) போன்ற உணவுகளும் Rasavid உணவகத்தின் சிறப்பு ஆகும். முக்கியமாக இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான முறையில் மண் பானையில் உணவு பரிமாறப்படுகிறது, இங்கு பார்சல் வாங்கினால் அதிலும் மண்பானையில் உணவுகளை வைத்து மிகவும் நேர்த்தியாக பேக் செய்யப்பட்டு அழகான முறையில் தருகிறார்கள். மேலும் அனைத்து வகையான மண்பாண்ட பொருட்களும் இங்கு கிடைகின்றன.