Nalli Dosai Anna Nagar

...Nalli Dosai Kadai...

சென்னை அண்ணா நகரில் ருசியான நல்லி தோசை மற்றும் கறி தோசை கடை

FEB 24, 2021


Nalli Dosai Kadai

உணவுப் பிரியர்களுக்கான சிறந்த மற்றும் மலிவான விலையில் தரமான உணவு. இது ஒரு வண்டிக் கடை தான், ஆனால் இந்த ருசியும் சுத்தமும் பெரிய கடைகளில் கூட கிடைக்காது. இங்க என்ன ஸ்பெஷல்-னு முதலில் பார்க்கலாம். நல்லி தோசை (Nalli Dosai), கறி தோசை (Meat Dosai), இட்லி பொடிமாஸ் (Idly Podimas), மிக்சட் தோசை (Mixed Dosai), இட்லி (Idly), ஆம்லெட் (Omelette), ஆப்பாயில் (Half boil) மற்றும் கலக்கி, இது எல்லாமே இங்க ஸ்பெஷலா கிடைக்கும். மாலை 5 மணிக்கு இங்க ஆட்டம் ஆரம்பமாயிடும், அதிகபட்சம் 7 மணி வரைக்கும் தான் நல்லி தோசை கிடைக்கும். இங்க நல்லி தோசை ரொம்ப ஸ்பெஷல் அதனால சீக்கிரம் போனால் தான் கிடைக்கும். அதுக்கு அப்புறம் 11 மணி வரைக்கும் மற்ற அயிட்டங்கள் தாராளமாக சாப்பிடலாம். (குறிப்பு: நல்லி தோசை மட்டும் பார்சல் வாங்கிட்டு போகாதீங்க, அங்கேயே சூடா சாப்பிடுங்க அது தான் டேஸ்ட்). வண்டி கடை தான் ஆனால் கூட்டம் அலைமோதும், கொஞ்சம் காத்திருந்து தான் சாப்பிடணும். மேலும் கறி தோசை மற்றும் பீப் பிரை போன்ற அயிட்டங்களும் ரொம்பவே ருசியா இருக்கும். இங்க இன்னொரு முக்கியமான ஒன்று பீப் சேர்வா, கறி எதுவாக இருந்தாலும் வாசனை நல்லா இருக்கும், எதிலுமே கவிச்சி அடிக்காது.


Special Nalli Dosai - Rs.80 / Kari Dosai - Rs.120 / Idly Podimas - Rs.60 / Mixed Dosai - Rs.40 / Idly (1) - Rs.7 / Omelette (or) Half boil - Rs.15 / Kalakki - Rs.30


கடையைப் பற்றி சொல்லிவிட்டு நம்ம அசோக் அண்ணனைப் பற்றி சொல்லாம விட்டா எப்படி... அசோக் அண்ணா அவர் தான் இந்த கடையை நடத்துகிறார். நல்ல மனிதர் எப்பவுமே ஒரு கனிவோடு தான் பேசுவார். ஒரே ஆளு தான் பதற்றபடாம பொறுமையா எல்லா வேலைகளையும் செய்வார். 1984-இல் அசோக் அண்ணாவோட அப்பா இந்த கடையை ஆரம்பித்திருக்கார், அதிலிருந்து 20 வருடம் அவர் நடத்திருக்கார். அதன் பிறகு அசோக் அண்ணா 20 வருடமாக நடத்திக்கிட்டு இருக்கார். அசோக் அண்ணா கிட்ட எப்படி இந்த தொழிலை இவ்வளவு நேர்த்தியாக செய்யுறீங்கன்னு கேட்டதற்கு அவர் சொன்ன பதில், உழைப்பு தான்... காலையில 7 மணிக்கே வேலைகளை ஆரம்பித்து விடுவாராம், எல்லா பொருளுமே மூட்டை மூட்டையாக தான் வாங்குவாராம், வெங்காயம், இஞ்சி, மிளகாய் எல்லாமே மொத்தமாக தான் வாங்கி வைப்பாராம். மசாலா பொருட்கள் எல்லாம் இவரே வீட்டில் தயார் செய்வது தானம். அதனால தான் இந்த டேஸ்ட்-ல உணவு கொடுக்க முடியுதுனு சொல்றாரு. அவரோட கடின உழைப்பு இன்றைக்கு பல இடங்களில் இருந்து தேடி வந்து சாப்டுட்டு போறாங்க. அவரு கூறிய தாரக மந்திரம் இது தான் "செய்யுற தொழிலை சுத்தமாக செய்தால் போதும் மற்றது எல்லாம் தானாக நடக்கும்".


For Digital Marketing